தமிழ்நாட்டுக்கு ரூ.7,057 கோடி வரிப்பகிர்வு - மத்திய அரசு விடுவிப்பு


தமிழ்நாட்டுக்கு ரூ.7,057 கோடி வரிப்பகிர்வு - மத்திய அரசு விடுவிப்பு
x
தினத்தந்தி 10 Jan 2025 3:07 PM IST (Updated: 10 Jan 2025 3:37 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டுக்கு ரூ.7,057 கோடியை வரிப்பகிர்வாக மத்திய அரசு விடுவித்துள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் வசூலாகும் வரி தொகையை மத்திய அரசு, மாநிலங்களுக்கு பகிர்ந்து அளித்து வருகிறது. அதன்படி 2025 ஜனவரி மாதத்துக்கான வரி பகிர்வாக ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்து 030 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்திற்கு ரூ.31,039 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பீகாருக்கு ரூ.17,403 கோடியும், மத்தியபிரதேசத்திற்கு ரூ.13,588 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரபிரதேசத்துக்கு ரூ.7,002.52 கோடி, அருணாச்சலபிரதேசத்துக்கு ரூ.3,040.14 கோடி, அசாமுக்கு ரூ. 5,412.38 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சத்தீஸ்கருக்கு ரூ.5,895.13 கோடி, குஜராத்துக்கு ரூ.6,017.99 கோடி, அரியானாவுக்கு ரூ.1,891.22 கோடி, இமாச்சலபிரதேசத்துக்கு ரூ.1,436.16 கோடி, ஜார்க்கண்ட்டுக்கு ரூ.5,722.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவுக்கு ரூ. 6,310.40 கோடி, கேரளாவுக்கு ரூ.3,330.83 கோடி, தமிழ்நாட்டுக்கு ரூ.7,057.89 கோடி, தெலங்கானாவுக்கு ரூ.3,637.09 கோடி, உத்தராகண்ட்டுக்கு ரூ.1,934.47 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ.13,017.06 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.


Next Story