பீகாரில் ரெயில்வே மேம்பாட்டுக்காக ரூ.95,566 கோடி முதலீடு: மத்திய மந்திரி தகவல்


பீகாரில் ரெயில்வே மேம்பாட்டுக்காக ரூ.95,566 கோடி முதலீடு:  மத்திய மந்திரி தகவல்
x

பீகார் மக்கள் பலன் பெறும் வகையில், 98 ரெயில் நிலையங்களில் மறுகட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன என மத்திய ரெயில்வே மந்திரி கூறியுள்ளார்.

பாட்னா,'

பீகாரில் ரெயில்வே துறையின் மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.95,566 கோடி மதிப்பிலான நிதியை மத்திய அரசு முதலீடு செய்துள்ளது என மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்து உள்ளார்.

பீகாரில் ரெயில்வே துறையில் மின்மயமாக்கும் பணிக்கான முயற்சிகளில் பிரதமர் மோடி அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என சுட்டி காட்டியுள்ள மந்திரி, 98 ரெயில் நிலையங்களில் மறுகட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன என கூறியுள்ளார். இதற்கான பலனை பீகார்வாசிகள் பெறுவார்கள் என்றும் கூறினார்.

பீகாரில் 100 சதவீத மின்மயமாக்கல் பணியை பிரதமர் மோடி அரசு தற்போது மேற்கொண்டுள்ளது. ரெயில்வே வழித்தடங்களை இரட்டிப்படைய செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன என்றார்.

பீகார் மீது பிரதமர் பெரிய மதிப்பு கொண்டிருக்கிறார். அதன் வளர்ச்சி பணிகள் மீது எப்போதும் கவனம் செலுத்தி வருகிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.

நடப்பு ஆண்டு ஜனவரியில், அமர்ந்து செல்லும் வசதிகளுடன் கூடிய 136 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன என நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றிற்கு அவர் எழுத்துப்பூர்வ முறையில் பதிலளித்து உள்ளார். இந்த ரெயில்களில் 100 சதவீத அளவுக்கு பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story