கர்நாடகாவில் வங்கி முன்பு நடந்த கொள்ளை சம்பவம் - ஒருவர் சுட்டுக்கொலை


கர்நாடகாவில் வங்கி முன்பு நடந்த கொள்ளை சம்பவம் - ஒருவர் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 16 Jan 2025 2:58 PM IST (Updated: 16 Jan 2025 3:00 PM IST)
t-max-icont-min-icon

வங்கி முன்பு நடந்த கொள்ளை சம்பவத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பீதர் பகுதியில் இயங்கி வரும் வங்கியில் இருந்து பணத்தை பெற்று ஏ.டி.எம். இயந்திரங்களில் நிரப்புவதற்காக ஊழியர்கள், பணப்பெட்டியை வாங்கி வந்தனர். அந்த பெட்டியை வாகனத்தில் ஏற்றுவதற்கான பணிகளை அவர்கள் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது இருசக்கர வாகனங்கள் வந்த 2 மர்ம நபர்கள், ஊழியர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தில் கிரீஷ் வெங்கடேஷ் என்ற ஊழியர் உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த மற்றொரு நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பட்டப்பகலில் சாலையில் நடந்த இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story