உத்தரகாண்டில் சாலை விபத்து; பலியான 2 பேரின் உடல் மீட்பு


உத்தரகாண்டில் சாலை விபத்து; பலியான 2 பேரின் உடல் மீட்பு
x

உத்தரகாண்டில் 900 மீட்டர் ஆழ பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் சிக்கி 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.

டேராடூன்,

உத்தரகாண்டில் டேராடூன் நகரில் சக்ரடா பகுதியில் லோகண்டி கிராமம் அருகே பண்டெல் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென பள்ளத்தில் கவிழ்ந்து இன்று விபத்தில் சிக்கியது. 900 மீட்டர் ஆழ பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் அதில் பயணித்தவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும், மாநில பேரிடர் பொறுப்பு படையை சேர்ந்த வீரர்கள் உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், விபத்தில் சிக்கி காயமடைந்து இருந்த 2 பேர் மீட்கப்பட்டனர். 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.

1 More update

Next Story