ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை- ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு
ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,
வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்ளவில்லை. வட்டி விகிதம் மாற்றமின்றி 6.5 சதவிகிதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று அறிவித்தார்.
அதன்படி, ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாததால் வீட்டுக்கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமுமின்றி பழைய நிலையே நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரெப்போ வட்டி விகிதம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் 250 அடிப்படை புள்ளிகள் உயர்ந்ததால் 6.5 சதவிகிதமாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இன்றி தொடர்கிறது. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமின்றி நீடிப்பது இது 11-வது முறையாகும்.