நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு


நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
x

நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசனம் பற்றிய 2 நாள் விவாதத்தின் முடிவாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று பேசினார். அப்போது, அம்பேத்கரை பற்றி சர்ச்சையாக பேசினார் என கூறப்படுகிறது. அம்பேத்கர் பெயரை கூறுவதைவிட்டு கடவுள் பெயரை சொன்னால் சொர்க்கமாவது கிடைக்கலாம்" என அமித்ஷா கூறினார்

இந்த நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று காலை கூடியபோது, அம்பேத்கரை பற்றிய சர்ச்சைப் பேச்சுக்கு மத்திய மந்திரி அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதேபோன்று நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து அம்பேத்கர் குறித்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேச்சு காரணமாக எழுந்த கடும் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை (19-ம் தேதி) காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Next Story