மனைவியை கொன்றுவிட்டு கொள்ளையர்கள் தாக்கியதாக நாடகமாடிய கணவன் - விசாரணையில் அம்பலம்


மனைவியை கொன்றுவிட்டு கொள்ளையர்கள் தாக்கியதாக நாடகமாடிய கணவன் - விசாரணையில் அம்பலம்
x

கோப்புப்படம் 

கணவனிடம் போலீசார் விசாரணை செய்தபோது முன்னுக்குப் பின் முரணான கருத்துகளை கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் மனைவியை கழுத்தறுத்துவிட்டு, கொள்ளையர்கள் தாக்கியதாக கணவன் நாடகமாடியது விசாரணையில் அம்பலமானது.

அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள கிஷன்கரில் உள்ள அரசு மருத்துவமனையில் கழுத்து அறுபட்ட நிலையில் மனைவியை அழைத்துக் கொண்டு, காயங்களுடன் ரோஹித் சைனி (35 வயது) என்ற நபர் வந்தார். அங்கு அவரது மனைவி சஞ்சுவை (33 வயது) பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் சிறிய காயங்களுடன் இருந்த ரோஹித்துக்கு சிகிச்சை அளித்தனர்.

இதுகுறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது, கொள்ளையர்கள் தங்களை தாக்கியதாகவும், மனைவியின் கழுத்தை அவர்கள் அறுத்ததாகவும் ரோஹித் தெரிவித்தார். பின்னர் தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், முன்னுக்குப் பின் முரணான கருத்துகளை தெரிவித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அப்போது தனது மனைவியை கழுத்தறுத்ததையும், பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்ததையும் ஒப்புக் கொண்டார். எதற்காக கொலை செய்தார் என்பது குறித்து தொடர்ந்து ரோஹித்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story