ரெயில்வே தனியார் மயம் ஆகாது- மத்திய அரசு உறுதி
ரெயில்வே சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறிய நிலையில், இது ரெயில்வே தனியார் மயமாவதற்கு வழிவகுக்காது அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
புதுடெல்லி,
இந்தியாவின் மிகப்பெரிய துறைகளில் ஒன்றாக ரெயில்வே உள்ளது. இதில் பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். ரெயில்வேயை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக அவ்வப்போது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் ரெயில்வே துறை தனியார் மயமாகாது என்று மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் உறுதி அளித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- "ரெயில்வே சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது,ரெயில்வே தனியார் மயமாக்க வழிவகுக்கும் என ஒருசில உறுப்பினர்கள் தெரிவித்தனர். ஆனால் இது தவறான கருத்தாகும். ரெயில்வே தனியார்மயம் ஆகாது. இது தொடர்பாக தவறான கருத்துகளை பரப்புவோரிடம், அவ்வாறு செய்ய வேண்டாம் என்று நான் முழு மனதுடன் வேண்டுகோள் விடுக்கிறேன்' என்றார்.
Related Tags :
Next Story