பீகார் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக முன்னேறி உள்ளது - ஜே.பி.நட்டா


பீகார் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக முன்னேறி உள்ளது - ஜே.பி.நட்டா
x

2005-ம் ஆண்டுக்கு முன்பு, பீகார் இருளில் இருந்தது என்று மத்திய மந்திரி ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

பாட்னா,

பீகார் சட்டசபை தேர்தலையொட்டி, நாளந்தா மாவட்டம் பக்தியார்பூர் தொகுதியில் நடந்த பா.ஜனதா கூட்டணி தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ஜனதா தலைவரும், மத்திய மந்திரியுமான ஜே.பி.நட்டா பங்கேற்றார்.

பிரசாரத்தில் அவர் பேசியதாவது:-

காங்கிரசும், ராஷ்டிரீய ஜனதாதளமும் மக்கள் நலனை பற்றி கவலைப்படுவது இல்லை. லாலுபிரசாத் யாதவுக்கு தனது மகனை முதல்-மந்திரி ஆக்குவதிலும், சோனியாகாந்திக்கு தனது மகனை பிரதமர் ஆக்குவதிலும்தான் அக்கறை உள்ளது.2005-ம் ஆண்டுக்கு முன்பு, பீகார் இருளில் இருந்தது. அதன்பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் வெளிச்சத்துக்கு வந்து விட்டது. முன்னணி மாநிலங்களில் ஒன்றாக முன்னேறி உள்ளது. 20 ஆண்டுகளில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மாநிலத்துக்கான ரெயில்வே நிதி ஒதுக்கீடு 9 மடங்கு அதிகரித்துள்ளது. 20 வந்தே பாரத் ரெயில்களும், 26 அம்ரித் பாரத் ரெயில்களும் விடப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story