தென் அமெரிக்க நாடுகளுக்கு ராகுல் காந்தி சுற்றுப்பயணம்


தென் அமெரிக்க நாடுகளுக்கு  ராகுல் காந்தி சுற்றுப்பயணம்
x

4 நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டோருடன் ராகுல் காந்தி கலந்துரையாட உள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தென் அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளதாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத்துறை பொறுப்பாளர் பவன் கெரா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தென் அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். நான்கு நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோருடன் அவர் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் மற்றும் கொலம்பியாவுக்கு ராகுல் காந்தி செல்வார் என்றும் அங்கு பல்கலைக்கழக மாணவர்களுடன் அவர் கலந்துரையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அடுத்த தலைமுறை உலகத் தலைவர்களுடன் அவர் கலந்துரையாடுவார் என்றும் கூறப்படுகிறது. நாடுகளின் அதிபர்கள் மற்றும் மூத்த தலைவர்களை ராகுல் காந்தி சந்திப்பார் என்றும் ஜனநாயக மற்றும் மூலோபாய உறவுகளை வலுப்படுத்துவார் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது

அமெரிக்க வரி விதிப்பு முறையைத் தொடர்ந்து, இந்தியாவுடன் பல்வேறு தொழில் உறவுகளை மேம்படுத்துவது, வேலை வாய்ப்பு மற்றும் நாட்டில் உள்ள தொழில்வாய்ப்புகளைப் பற்றி தென் அமெரிக்க நாடுகளுக்கு எடுத்துரைக்கும் விதமாகவும் தொழிலதிபர்கள் மற்றும் தொழில் அமைப்புகளையும் ராகுல் காந்தி சந்தித்து பேச உள்ளார்.

1 More update

Next Story