புதுச்சேரி: பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை; கும்பல் அட்டூழியம்
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியிடம் கும்பல் ஒன்று பாலியல் தொல்லையில் ஈடுபட்டது.
புதுச்சேரி,
புதுச்சேரியில் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் ஆண் நண்பருடன் இருந்த மாணவி ஒருவருக்கு 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று பாலியல் தொல்லை அளித்துள்ளது.
அந்த மாணவி வடமாநிலத்தில் இருந்து படிக்க வந்துள்ளார். இந்நிலையில், அவருடன் இருந்த ஆண் நண்பரை 3 பேர் கொண்ட கும்பல் விரட்டியடித்து விட்டு, மாணவியிடம் அத்துமீறியுள்ளது. அந்த 3 பேரில் ஒருவர் பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருபவர் என கூறப்படுகிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆண்டு தொடக்கத்தில் மாணவி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்து பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், புதுச்சேரியில், பல்கலைக்கழக வளாகத்தில் மற்றொரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
Related Tags :
Next Story