மராட்டியம்: போலீசார் அதிரடி சோதனை - பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 2 பெண்கள் மீட்பு

மீட்கப்பட்ட 2 பெண்களும் போதிய உதவி வழங்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் பீட் மாவட்டம் டலிகான் பகுதியில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு டகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 2 பெண்களை போலீசார் மீட்டனர். இதையடுத்து, பாலியல் தொழில் நடத்தி தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அதேவேளை, மீட்கப்பட்ட 2 பெண்களும் காப்பகங்களில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இருவரும் போதிய உதவி வழங்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story






