தீபாவளிக்கு நாட்டு மக்களுக்கு இரட்டை போனஸ் காத்திருக்கிறது - பிரதமர் மோடி


தீபாவளிக்கு நாட்டு மக்களுக்கு இரட்டை போனஸ் காத்திருக்கிறது - பிரதமர் மோடி
x

ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், சிறு மற்றும் பெரு தொழில்முனைவோர் இதன்முலம் பயனடைவர் என்று பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பேசியதாவது:-

இந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திரம் மற்றும் புரட்சியின் வண்ணங்களால் நிறைந்துள்ளது. இந்த சுதந்திரத் திருவிழாவின் மத்தியில், இன்று, நாட்டின் தலைநகரான டெல்லி ஒரு வளர்ச்சிப் புரட்சியை காணப்போகிறது.. சிறிது நேரத்திற்கு முன்பு, டெல்லி துவாரகா விரைவுச் சாலை மற்றும் நகர்ப்புற விரிவாக்கச் சாலையின் இணைப்பைப் பெற்றுள்ளது. இது டெல்லியின் குருகிராம் நகரின் முழு நடுத்தர மக்களின் வசதியை அதிகரிக்கும்.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி, செங்கோட்டையில் இருந்து, நாட்டின் பொருளாதாரம், நாட்டின் தன்னம்பிக்கை பற்றி நான் நம்பிக்கையுடன் பேசினேன். உலகம் இந்தியாவைப் பார்த்து மதிப்பிடும்போது, அதன் முதல் பார்வை நமது தலைநகரான டெல்லியின் மீது தான் விழுகிறது. எனவே, டெல்லியை ஒரு வளர்ச்சி மாதிரியாக மாற்ற வேண்டும்.

அரசியலமைப்பைத் தலையில் சுமந்து கொண்டு நடனமாடுபவர்கள், அரசியலமைப்பை எப்படி மிதித்தார்கள், பாபா சாஹேப்பின் உணர்வுகளுக்கு எப்படி துரோகம் செய்தார்கள், இன்று நான் உங்களுக்கு அந்த உண்மையைச் சொல்லப் போகிறேன். டெல்லியில், துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ஒரு ஆபத்தான சட்டம் இருந்தது. டெல்லி மாநகராட்சிச் சட்டத்தில், ஒரு துப்புரவுத் தொழிலாளி தகவல் தெரிவிக்காமல் வேலைக்கு வரவில்லை என்றால், அவர்கள் ஒரு மாதம் சிறையில் அடைக்கப்படலாம் என்ற விதி இருந்தது. இன்று சமூக நீதியைப் பற்றிப் பெரிதாகப் பேசுபவர்கள் நாட்டில் இதுபோன்ற பல விதிகளையும் சட்டங்களையும் உருவாக்கியுள்ளனர். இதுபோன்ற அநீதியான சட்டங்களை அயராது கண்டுபிடித்து ஒழிப்பவன் இந்த மோடி.

எங்களைப் பொருத்தவரையில் சீர்திருத்தம் என்பது -நல்லாட்சியை விரிவுபடுத்துதலே. இதையே சீர்திருத்தம் என்று வலியுறுத்தி வருகிறோம். அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்தம் ஜிஎஸ்டியில் மேற்கொள்ளப்பட்டவிருக்கிறது.

ஜிஎஸ்டியை எளிமையாக்குவதும், வரி விகிதங்களை சீராய்வதையும் நாங்கள் முயன்று வருகிறோம். இதன்மூலம், ஒவ்வொரு குடும்பமும் பலனடையும். ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், ஒவ்வொரு சிறு மற்றும் பெரு தொழில்முனைவோர், ஒவ்வொரு வர்த்தகரும், தொழிலதிபரும் இதன்மூலம் பலனடைவர். தீபாவளிக்கு நாட்டு மக்களுக்கு இரட்டை போனஸ் காத்திருக்கிறது..

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story