விண்வெளித்துறை நம்மை பெருமைப்படுத்துகிறது - பிரதமர் மோடி


விண்வெளித்துறை நம்மை பெருமைப்படுத்துகிறது - பிரதமர் மோடி
x

இஸ்ரோவின் வெற்றிகள் தேசம் மட்டுமன்றி மக்களின் முன்னேற்றத்தையும் மேம்படுத்தி உள்ளன என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இஸ்ரோவால் 4,410 கிலோ எடையிலான சிஎம்எஸ்- 03 செயற்கைக்கோள் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் இன்று மாலை விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு குவிகிறது.

சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசும்போது, எல்விஎம் -3 ராக்கெட் மூலம் சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. சிஎம்எஸ்-03 அதிக எடையுடைய செயற்கைக்கோள். இதன் பயன்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இன்று அனைத்தும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடைபெற்றது என்றார்.

இந்த நிலையில், இது குறித்து, பிரதமர் மோடி தமது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

அதிகபட்ச எடையுள்ள சிஎம்எஸ் -03 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. நமது வின்வெளித் துறை நம்மை தொடர்ந்து பெருமிதம் கொள்ளச்செய்கிறது. இந்தியாவின் அதிக எடை(4,410 கிலோ) கொண்ட தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் 'சிஎம்எஸ்-03' வெற்றிகரமாக நிலைநிறுத்தியமைக்காக இஸ்ரோவுக்கு பாராட்டுகள்.

நமது விண்வெளித்துறை சிறப்புக்கும் புதுமைக்கும் அடையாளமாக மாறியுள்ளது பாராட்டுக்குரியது. இஸ்ரோவின் வெற்றிகள் தேசம் மட்டுமன்றி மக்களின் முன்னேற்றத்தையும் மேம்படுத்தி உள்ளன என அதில் பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story