பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் டெல்லி பயணம்

உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் அதிகாரிகளை அவர் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது
மீனம்பாக்கம்,
பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வருகிறது. இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் நேற்று மாலை 5.50 மணிக்கு திடீர் பயணமாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் அதிகாரிகளை அவர் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. பாமகவில் நிலவும் உள்கட்சி பூசலுக்கு இடையே அன்புமணி ராமதாஸ் டெல்லியில் முகாமிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story






