பிரதமர் மோடி நாளை ஆந்திரா பயணம் - ரூ.13,430 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்


பிரதமர் மோடி நாளை ஆந்திரா பயணம் - ரூ.13,430 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
x

ஸ்ரீசலைத்தில் உள்ள சிவாஜி ஸ்பூர்த்தி கேந்திராவிற்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி நாளை ஆந்திர மாநிலத்திற்கு செல்ல உள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, நந்தியால் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ பிரம்மாரம்ப மல்லிகார்ஜுன சுவாமி கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்ய உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அவர் ஸ்ரீசலைத்தில் உள்ள சிவாஜி ஸ்பூர்த்தி கேந்திராவிற்கு செல்ல உள்ளார்.

அதனை தொடர்ந்து கர்னூல் மாவட்டத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ.13,430 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மோடி உரையாற்ற உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story