விமான விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதல்-மந்திரியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி

, ,, , ,
காந்தி நகர்,
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து நேற்று மதியம் ஏர் இந்தியா விமானம் இங்கிலாந்தின் லண்டனுக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 230 பயணிகள் 10 பணியாளர்கள், 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் பயணித்தனர்.
விமானம் மதியம் 1.39 மணியளவில் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் விமான நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவ மாணவர் விடுதி மீது விமானம் விழுந்து வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்தனர். மருத்துவ மாணவர் விடுதியில் 7 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் பயணம் செய்த ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்தார்.
இந்த விமானத்தில் பா.ஜ.க. மூத்த தலைவரும், குஜராத் முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானியும் உயிரிழந்தார். அவர் லண்டனில் உள்ள தனது மனைவியை அழைத்து வர விமானத்தில் சென்றுள்ளார்.ஆனால், விமான விபத்தில் விஜய் ரூபானி உயிரிழந்தார்.
இந்நிலையில், விமான விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானியின் குடும்பத்தினரை பிரதமர் மோடி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.






