சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு


சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு
x
தினத்தந்தி 16 Jan 2025 10:41 PM IST (Updated: 17 Jan 2025 6:47 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் அரசு முறைப்பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் சிங்கப்பூர் அதிபரை வரவேற்றனர்.

தொடர்ந்து, சிங்கப்பூர் அதிபரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்த சந்திப்பின் போது உடன் இருந்தனர்.

1 More update

Next Story