டிரம்பை எதிர்கொள்ள பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை - ராகுல்காந்தி தாக்கு

பீகாரில் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பாட்னா,
பீகார் மாநிலம் பாட்னாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;
”இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் நின்றதற்கு நான் தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் பலமுறை கூறி வருகிறார். ஆனால், நமது பிரதமருக்கு அவரை எதிர்கொள்ளும் தைரியம் இல்லை. டிரம்ப் பொய் சொல்கிறார் பிரதமரால் கூற முடியவில்லை. மோடி அமெரிக்காவுக்குச் செல்லவிருந்தார். ஆனால் டிரம்பிற்கு பயந்து அவர் செல்லவில்லை.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி வாக்குத் திருட்டு மூலம் ஆட்சிக்கு வந்தது. அம்பேத்கர் வடிவமைத்த அரசியலமைப்பை அழிக்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் பிரதமரும் தீவிரமாக உள்ளனர். பிகாரில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அது விவசாயிகள், தொழிலாளர்கள், தலித்துகள் மற்றும் பலவீனமான பிரிவினரின் அரசாக இருக்கும். அனைத்து சமூகங்களின் பிரதிநிதித்துவத்தையும் கொண்டதாக இருக்கும் என்றும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் உலகின் சிறந்த பல்கலைக்கழகம் நாளந்தாவில் அமையும்.”
இவ்வாறு அவர் கூறினார்.






