பிரிட்டன் புதிய பிரதமருக்கு மோடி வாழ்த்து


பிரிட்டன் புதிய பிரதமருக்கு மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 5 July 2024 4:53 PM IST (Updated: 5 July 2024 5:04 PM IST)
t-max-icont-min-icon

பிரிட்டன் தேர்தலில் தொழிலாளர் கட்சி 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.

புதுடெல்லி,

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 650 தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி. பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி. லிபரெல் டெமோகிராட்ஸ் கட்சி ஆகியவை வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன.

மொத்தம் உள்ள 650 தொகுதிகளில் தொழிலாளர் கட்சி 410 தொகுதிகளிலும், ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிங் கட்சி 119 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் 14 ஆண்டுகள் கழித்து தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. இதையடுத்து கீர் ஸ்டார்மர் பிரிட்டனின் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.

இந்நிலையில், பிரிட்டனின் புதிய பிரதமராக பதிவியேற்க உள்ள கீர் ஸ்டார்மர்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரிட்டன் பொது தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்ற கீர் ஸ்டார்மர்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். பரஸ்பர வளர்ச்சி மற்றும் செழிப்பை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து துறைகளிலும் இந்தியா-பிரிட்டன் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த நேர்மறையான, ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நான் எதிர்நோக்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, அவர் பதிவிட்டுள்ள மற்றொரு பதிவில், இங்கிலாந்தின் போற்றத்தக்க தலைமைத்துவத்திற்காகவும், உங்கள் பதவிக் காலத்தில் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான உறவுகளை ஆழப்படுத்த உங்களின் தீவிர பங்களிப்புக்கும் நன்றி ரிஷி சுனக். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.


Next Story