டொனால்டு டிரம்ப்பை பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார் - ராகுல் காந்தி


டொனால்டு டிரம்ப்பை பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார் - ராகுல் காந்தி
x

பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

பாட்னா,

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு வரும் 6ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு வரும் 11ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே, பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஐக்கிய ஜனதா தளம், பாஜக இடையேயான ஆளும் கூட்டணியில் மாநில முதல்-மந்திரியாக நிதிஷ் குமார் செயல்பட்டு வருகிறார். அதேவேளை, எதிர்க்கட்சிகளாக உள்ள ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அம்மாநிலத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில், பீகாரின் பிஹுசாராய் மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,

தேர்தல் நடைபெறும் வரை பிரதமர் மோடி இங்கு வந்து பேசுவார், நீங்கள் கேட்பதை தருவதாக வாக்குறுதிகளை கொடுப்பார். ஆனால், தேர்தல் முடிந்த உடன் அவர் பீகார் வரமாட்டார். உங்கள் பேச்சையும் கேட்கமாட்டார். அவர் வாக்குக்காக எதையும் செய்வார். யோகா செய்யச்சொல்லுங்கள் அவர் அதை செய்வார். ஆனால், தேர்தல் முடிந்தப்பின் அதானியும், அம்பானியும் ஆடி, பாடுவார்கள். இவை அனைத்தும் நாடகம் தான்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பை பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார். ஆபரேஷன் சிந்தூரை நிறுத்துமாறு டொனால்டு டிரம்ப் பிரதமர் மோடியிடம் கூறியுள்ளார். அதைக்கேட்டு பிரதமர் மோடி உடனடியாக நிறுத்திவிட்டார். பிரதமர் மோடியை ரிமோர்ட்டு கண்ட்ரோலாக அதானி, அம்பானி இயக்குகின்றனர்

என்றார்.

1 More update

Next Story