ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவிய பாகிஸ்தானியர் கைது
இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானியரை ராணுவ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே பாகிஸ்தான் ஊடுருவல்காரர் ஒருவரை ராணுவம் கைது செய்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
நேற்று மாலை நூர்கோட் என்ற இந்திய எல்லையோர கிராமத்துக்குள் நுழைந்த முகமது சாதிக் (18) என்ற நபரை ராணுவத்தினர் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர். ஊடுருவ முயன்ற அந்த நபர் சந்தேகத்துக்கிடமான எந்தப் பொருளையும் எடுத்துவரவில்லை என்றும் அவர் இந்திய எல்லைக்குள் வந்த நோக்கம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் தவறுதலாக அந்த நபர் இந்திய எல்லைக்குள் வந்து விட்டதாக தெரியவந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story