மராட்டியத்தில் சுமார் 10 டன் வெள்ளி பறிமுதல்


மராட்டியத்தில் சுமார் 10 டன் வெள்ளி பறிமுதல்
x

பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளி ஒரு வங்கிக்கு சொந்தமானது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று ஒரே நாளில் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில், தேர்தல் நடைபெற்ற நாளான நேற்று மாநிலத்தின் துலே மாவட்டத்தில் உள்ள தால்னர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வழக்கமான சோதனை நடத்தினர். அந்த சோதனையில் நாக்பூர் நோக்கி சென்ற லாரியில் இருந்து சுமார் 10 டன் (10,080 கிலோ) எடையுள்ள வெள்ளி கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக நாசிக்கின் சிறப்பு காவல் கண்காணிப்பாளர் தத்தாத்ரே கராலே தெரிவித்தார். முதற்கட்ட விசாரணையில், வெள்ளி ஒரு வங்கிக்கு சொந்தமானது என்றும் சரிபார்த்த பிறகு அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த அக்.15 முதல், மராட்டியத்தில் மாநில மற்றும் மத்திய அமைப்புகளின் அமலாக்க நடவடிக்கைகளில் ரூ.706.98 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளன. இதில் சட்டவிரோத பணம், மதுபானம், போதைப்பொருள் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள் அடங்கும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story