ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3.2 லட்சம் மோசடி – பெண் கைது

ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3.2 லட்சம் மோசடி செய்த பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தானே,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள ஒருவர் ரெயில்வே வேலைக்காக இரவும் பகலும் தீவிரமாக படித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு ரெயில்வே வேலை வாங்கித் தருவதாகக் கூறி 42 வயது பெண் ரூ.3.2 லட்சம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட நபரிடம் இந்திய ரெயில்வேயில் உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக அந்தப் பெண் உறுதியளித்து, அதற்காக ரூ.5 லட்சம் கோரினார்.
பாதிக்கப்பட்டவர் கல்யாணில் உள்ள ஒரு ஹோட்டலில் அந்தப் பெண்ணைச் சந்தித்து, முன்கூட்டியே ரூ.3.2 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் குற்றம் அந்த பெண் போலி ஆவணங்களை காண்பித்து, அவற்றை மத்திய, ரெயில்வே அமைச்சகம் மற்றும் ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தால் வழங்கப்பட்ட அசல் ஆவணங்களாகக் காட்டிக் கொடுத்திருக்கிறார்
பாதிக்கப்பட்டவர் பின்னர் தனக்கு போலி ஆவணங்கள் வழங்கப்பட்டதாக கண்டுபிடித்தார். பணத்தைத் திருப்பித் தருமாறு அவர் கேட்டபோது, அந்தப் பெண் தப்பித்துவிட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவரின் புகாரின் அடிப்படையில், கல்யாண் காவல்துறை இன்று அந்தப் பெண் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், விசாரணை நடத்தி வருகின்றனர்.