ஒடிசா: பைக்-கார் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் பலி

ஒடிசாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைக்கில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஜி உதயகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீபல்லா காட்டியில் உள்ள காட் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு இந்த விபத்து நடந்தது. கார் ஜி உதயகிரியிலிருந்து ரெய்கியா பகுதிக்கு சென்று கொண்டிருந்தபோது, பைக் எதிர் திசையில் சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக காரும் பைக்கும் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பைக்கில் பயணித்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காரில் இருந்த இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் உடலையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
மேலும் இறந்தவர்கள் கலிங்கா கிராமத்தை சேர்ந்த நாயக், காடிங்கா கிராமத்தை சேர்ந்த சங்கர் பிரதான் மற்றும் ஸ்ரீஹரி பிரதான் என அடையாளம் காணப்பட்டனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






