டெல்லி-மும்பை பேருந்தில் ரூ.5 கோடி போதைப்பொருளுடன் நைஜீரிய பெண் கைது

போதைப்பொருட்களை விற்பனை செய்யும் டீலர் ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை,
டெல்லியில் இருந்து மும்பைக்கு பேருந்து மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திற்கு (DRI) ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், டெல்லியில் இருந்து மும்பை நோக்கி வந்துகொண்டிருந்த ஒரு பேருந்தை, மும்பையில் இருந்து சுமார் 50 கி.மீ. தூரத்திற்கு வெளியே அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
இந்த சோதனையின்போது பேருந்தில் இருந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த பெண்ணிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்பிலான 2.56 கிலோ போதைப்பொருட்கள் மற்றும் 584 கிராம் போதை மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த பெண்ணை கைது செய்து அதிகாரிகள் விசாரித்தனர். இந்த விசாரணையில் கிடைத்த தகவலின் மூலம், போதைப்பொருட்களை விற்பனை செய்யும் டீலர் ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






