‘நிகோபார் தீவு மேம்பாட்டுத் திட்டம் நமது கடல்சார் வர்த்தகத்தை பலமடங்கு அதிகரிக்கும்’ - அமித்ஷா


‘நிகோபார் தீவு மேம்பாட்டுத் திட்டம் நமது கடல்சார் வர்த்தகத்தை பலமடங்கு அதிகரிக்கும்’ - அமித்ஷா
x

‘இந்தியா கேட்’ விரைவில் உலகத்தின் நுழைவாயிலாக மாறும் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையில் நடைபெறும் ‘இந்திய கடல்சார் வாரம் 2025’ தொடக்க நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“இந்தியாவிடம் ஜனநாயக ஸ்திரத்தன்மையும், கடற்படை திறன்களும் உள்ளன. இந்தோ-பசிபிக் மற்றும் தெற்கு பிராந்திய நாடுகளுக்கு இடையிலான இடைவெளியை இந்தியா குறைத்துள்ளது.

5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ‘கிரேட் நிக்கோபார் திட்டம்’ நமது கடல்சார் உலக வர்த்தகத்தை பல மடங்கு அதிகரிக்கும். வங்காள விரிகுடாவில் உள்ள நிகோபார் தீவை மேம்படுத்தும் நோக்கில், 2021 ஆம் ஆண்டில் இந்திய அரசு இந்த திட்டத்தின் கட்டுமானத்தைத் தொடங்கியது.

போட்டியை விட ஒத்துழைப்பை இந்தியா நம்புகிறது. கடல்சார் துறையில் ரூ.10 லட்சம் கோடி மதிப்புள்ள வருமானத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. மும்பைக்கு அருகில் 10 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் கட்டப்படவுள்ள ‘வாதவன்’ துறைமுகம், ஒரு நாள் உலகின் தலைசிறந்த 10 துறைமுகங்களில் ஒன்றாக மாறும்.

கடல்சார் துறையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்பு சீர்திருத்தங்கள் இந்தியாவை உலகளாவிய கடல்சார் துறையில் ஒரு வளர்ந்து வரும் சக்தியாக மாற்றியுள்ளன. ஒரு புதிய கடல்சார் வரலாற்றை உருவாக்கும் தருணத்தில் நாம் இருக்கிறோம். ‘கடல்சார் வாரம்’ போன்ற முயற்சிகள் மூலம் ‘இந்தியா கேட்’ விரைவில் உலகத்தின் நுழைவாயிலாக மாறும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story