புலம்பெயர் தொழிலாளர்கள் கொலை: மணிப்பூரில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 8 பேர் கைது


புலம்பெயர் தொழிலாளர்கள் கொலை: மணிப்பூரில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 8 பேர் கைது
x
தினத்தந்தி 17 Dec 2024 12:36 PM IST (Updated: 17 Dec 2024 1:25 PM IST)
t-max-icont-min-icon

புலம்பெயர் தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இம்பால்,

மணிப்பூரில் காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவு, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும். இந்த பயங்கரவாத அமைப்பினர், இம்பால் பள்ளத்தாக்கில் மக்களை மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பிற குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை கண்டறிந்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 14-ந்தேதி பீகார் மாநிலத்தை சேர்ந்த 2 புலம்பெயர் தொழிலாளர்கள், இந்த பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீசார் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் கொலை வழக்கில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் 10 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story