டி-சர்ட் அணிந்து வந்த எம்.பி.க்கள்; மக்களவை ஒத்தி வைப்பு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நண்பகல் 12 மணிவரை அவை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு வாசகங்களுடன் கூடிய டி-சர்ட் அணிந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் வந்திருந்தனர். இந்த நிலையில், அவை தொடங்கியதும் சபாநாயகர் ஓம் பிர்லா பேசும்போது, எம்.பி.க்களை டி-சர்ட் அணிந்து வரவேண்டாம் என கேட்டு கொண்டார். இதனை தொடர்ந்து, நண்பகல் 12 மணிவரை அவை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் சபாநாயகர் ஜெகதீப் தன்கார், அவையை நண்பகல் 12 மணிவரை ஒத்தி வைத்து உத்தரவிட்டு உள்ளார். அவையில் தான்பார்த்த விசயங்களை பற்றி பேச வேண்டும் என கூறி அரசியல் கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்திப்பதற்காக அழைப்பு விடுத்துள்ளார். எனினும், என்ன விசயங்களை பார்த்துள்ளார் என்ற விவரங்களை அவர் பகிர்ந்து கொள்ளவில்லை.
Related Tags :
Next Story