மத்திய பிரதேசத்தில் 2 நிறுவனங்களில் தீ விபத்து

தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தூர்,
மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள தொழில்துறை பூங்காவில் அமைந்துள்ள 2 தனியார் நிறுவனங்களில் இன்று காலை 8 மணியாளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் 15 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணியை தொடங்கினர். பல மணி நேர இடைவிடாத முயற்சிக்குப் பிறகு, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, மேலும் இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கருப்புகையாக காட்சியளித்தது.
Related Tags :
Next Story