ம.பி.: 140 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவன்


ம.பி.:  140 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவன்
x

கோப்புப்படம்

மத்திய பிரதேசத்தில் 140 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவனை மீட்கும் பணி துரித கதியில் நடந்து வருகிறது.

போபால்,

மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் பிப்ளியா கிராமத்தில் 140 அடி ஆழ ஆழ்துளை கிணறு ஒன்றில் 10 வயது சிறுவன் நேற்று மாலை 5 மணியளவில் விழுந்துள்ளான். 39 அடி ஆழத்தில் அந்த சிறுவன் இருக்கிறான். இதனை ரகோகார் தொகுதிக்கான காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெய்வர்தன் சிங் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து ஆழ்துளை கிணறுக்கு இணையாக 25 அடி ஆழத்தில் குழி ஒன்று தோண்டப்பட்டு உள்ளது என குணா மாவட்ட கலெக்டர் சதீந்திர சிங் கூறியுள்ளார். அந்த ஆழ்துளை கிணறு நீரின்றி பயனற்று உள்ளது. எனினும், அதற்கு மூடி எதுவும் போடாமல் திறந்த நிலையிலேயே இருந்துள்ளது என்றும் கலெக்டர் கூறியுள்ளார்.

ஆழ்துளை கிணற்றுக்கு உள்ளே பிராணவாயு செலுத்தப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், போலீசார் மற்றும் உள்ளூர் அமைப்புகள் சேர்ந்து உடனடியாக மீட்பு பணியை மேற்கொண்டனர். தேசிய பேரிடர் பொறுப்பு படையினரும் சம்பவ பகுதிக்கு சென்றுள்ளனர்.


Next Story