மராட்டிய முதல்-மந்திரி வீட்டுக்கு வெளியே தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு


மராட்டிய முதல்-மந்திரி வீட்டுக்கு வெளியே தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு
x

அஜித் மைதகியை மலபார் ஹில் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.

மும்பை,

மராட்டியத்தில் தெற்கு மும்பை நகரில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வீடு அமைந்து உள்ளது. வர்ஷா என பெயரிடப்பட்ட அந்த வீட்டுக்கு வெளியே சோலாப்பூரை சேர்ந்த அஜித் மைதகி (வயது 39) என்ற நபர் இன்று திடீரென வந்து தீக்குளிக்க முயன்றார்.

இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பெட்ரோல் கேனுடன் வந்த அவரை மும்பை போலீசார் உடனடியாக தடுத்து நிறுத்தினர். அவரை தற்கொலை முயற்சியில் இருந்து மீட்டனர். இதன்பின்னர் மலபார் ஹில் காவல் நிலையத்திற்கு அவரை அழைத்து சென்றனர்.

இது தொடர்பாக வழக்கு ஒன்றும் பதிவானது. அவருக்கு மாநில தலைமையகத்தில் வேலை ஒன்று முழுமையடையாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனால், அவர் தொடர்ந்து வருத்தத்தில் இருந்துள்ளார். இதனை தொடர்ந்தே இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். அவருக்கு போலீசார் ஆலோசனை வழங்கினர்.

1 More update

Next Story