கொடுத்த ரூ. 2 ஆயிரம் பணத்தை திருப்பி கேட்டதால் ஆத்திரம்; இளைஞர் படுகொலை


கொடுத்த ரூ. 2 ஆயிரம் பணத்தை திருப்பி கேட்டதால் ஆத்திரம்; இளைஞர் படுகொலை
x

அடிலுக்கும் பர்தீனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

டெல்லி,

தலைநகர் டெல்லியில் ஜப்ராபாத் பகுதியை சேர்ந்த இளைஞர் பர்தீன். இவர் அதேபகுதியை சேர்ந்த அடில் என்பவருக்கு ரூ. 2 ஆயிரம் பணம் கடனாக கொடுத்துள்ளார். ஆனால், அடில் அந்த பணத்தை பர்தீனிடம் திரும்பி கொடுக்கவில்லை.

இந்நிலையில், அடில் நேற்று அதிகாலை தனது நண்பர் ஜாவித் உடன் தெருவில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பர்தீன் கொடுத்த ரூ. 2 ஆயிரம் பணத்தை திருப்பி தரும்படி அடிலிடம் கேட்டுள்ளார். அப்போது, அடிலுக்கும் பர்தீனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அடில் மறைத்து வைத்திருந்த கத்தியால் பர்தீனை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பர்தீனை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பர்தீனை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலை செய்துவிட்டு தப்பியோடிய அடில் உள்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story