போலீசாரிடம் இருந்து தப்பிக்க போதைப்பொருள் பொட்டலத்தை விழுங்கிய நபர் உயிரிழப்பு


போலீசாரிடம் இருந்து தப்பிக்க போதைப்பொருள் பொட்டலத்தை விழுங்கிய நபர் உயிரிழப்பு
x

கேரளாவில் போலீசாரிடமிருந்து தப்பிப்பதற்காக போதைப்பொருள் பொட்டலத்தை விழுங்கிய நபர் உயிரிழந்தார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ஷானித் என்பவர் போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஷானித்தை கைது செய்ய போலீசார் சென்றனர்.

இதையறிந்த ஷானித், கையில் வைத்திருந்த போதைப்பொருள் பொட்டலத்தை விழுங்கியுள்ளார். இதனால் சிறிது நேரத்தில் ஷானித் மயக்கமடைந்தார். பின்னர் போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் ஷானித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story