சொத்து பிரச்சினை: தந்தையின் தலையை வெட்டிக்கொன்ற கொடூர மகன்

சொத்துக்களை தனக்கு எழுதி கொடுக்கும்படி தந்தையை வற்புறுத்தி வந்தார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பக்வத் மிஸ்ரா (வயது 60). இவரது மகன்கள் ரதிஷம் மிஸ்ரா (வயது 33), சஞ்சீவ் மிஸ்ரா.
இதனிடையே, பக்வத்திற்கும் அவரது மூத்த மகன் ரதிஷம் மிஸ்ராவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக சொத்து பிரச்சினை நிலவி வந்தது.
இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்குமுன் புனேவில் இருந்து கோரக்பூர் திரும்பிய ரதிஷம் சொத்துக்களை தனக்கு எழுதி கொடுக்கும்படி தந்தையை வற்புறுத்தி வந்தார். ஆனால், அதற்கு பக்வத் மிஸ்ரா மறுப்பு தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த ரதிஷம் நேற்று இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தந்தை பக்வத் மிஸ்ராவை கூர்மையான ஆயுதத்தால் கொடூரமாக கொலை செய்தார். பக்வத் மிஸ்ராவின் தலையை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று ரதிஷம் மிஸ்ராவை கைது செய்தனர். மேலும், கொல்லப்பட்ட பக்வத் மிஸ்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர கொலை குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






