மத்திய மந்திரி நிதின் கட்கரி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

நாக்பூரின் துளசிபாக் பகுதியில் உள்ள உமேஷ் விஷ்ணு ராவத் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள மத்திய மந்திரி நிதின் கட்கரியின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மர்ம நபர் ஒருவர் காவல் அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தார். அந்த தொலைபேசி எண் மூலம் மிரட்டல் விடுத்த நபரின் இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதன்படி நாக்பூரின் துளசிபாக் பகுதியில் உள்ள உமேஷ் விஷ்ணு ராவத் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே மத்திய மந்திரியின் வீட்டிற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






