மல்லிகார்ஜுன கார்கேவிடம் வாழ்த்து பெற்ற பிரியங்கா காந்தி


மல்லிகார்ஜுன கார்கேவிடம் வாழ்த்து பெற்ற பிரியங்கா காந்தி
x
தினத்தந்தி 23 Nov 2024 6:22 PM IST (Updated: 24 Nov 2024 2:00 PM IST)
t-max-icont-min-icon

பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

புதுடெல்லி,

வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். இதன்படி காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி, பாஜக வேட்பாளராக நவ்யா அரிதாஸ், இடதுசாரி கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளராக சத்யன் மெகோரி களமிறங்கினர்.

இந்த சூழலில் வயநாடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இதில் வயநாடு மக்களவை தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றுள்ளார். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே இந்த மகத்தான வெற்றியை பிரியங்கா காந்தி சாத்தியமாக்கி உள்ளார்.

இந்த நிலையில், பிரியங்கா காந்தி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து வாழ்த்து பெற்றார். இது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

வயநாடு மக்களுக்கு நன்றி. பிரியங்கா காந்தி நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களுக்கான சக்திவாய்ந்த குரலாக இருப்பார். அவரது திறமையான தலைமை , உறுதிப்பாடு மற்றும் அவரது வலுவான அர்ப்பணிப்பு பொதுத் துறையை மேலும் வளப்படுத்தும். என தெரிவித்துள்ளார் .


Next Story