மராட்டியத்தில் பாஜக கூட்டணி அமோகம்: ஜார்கண்ட்டில் இந்தியா கூட்டணி வெற்றி
மராட்டியம், ஜார்கண்ட்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
மும்பை,
மராட்டியம், ஜார்கண்ட் சட்டசபை தேர்தலுடன் கேரளாவின் வயநாடு, மராட்டியத்தின் நாண்டட் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் தற்போது எண்ணப்பட்டு வருகிறது.
Live Updates
- 23 Nov 2024 11:04 AM IST
மராட்டியம், ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்: வயநாடு இடைத்தேர்தல் - காலை 11.00 மணி நிலவரம்
மராட்டியம் (288 தொகுதிகள்) சட்டசபை தேர்தல் முன்னிலை நிலவரம்
பா.ஜனதா கூட்டணி - 222
காங்கிரஸ் கூட்டணி - 53
பிற கட்சிகள் - 13
ஜார்கண்ட் (81 தொகுதிகள்) சட்டசபை தேர்தல் முன்னிலை நிலவரம்
பா.ஜனதா கூட்டணி - 28
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம். எம்.) கூட்டணி - 51
பிற கட்சிகள் - 2
வயநாடு இடைத்தேர்தல் முன்னணி நிலவரம் :-
காங்கிரஸ் - 2,53,940
சி.பி.ஐ - 86,401
பா.ஜனதா - 48,122
பிற கட்சிகள் - 568
- 23 Nov 2024 10:59 AM IST
சட்டசபை தேர்தல்: ஜார்கண்டில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை
ஜார்க்கண்டில் தற்போது எண்ணப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 42 தொகுதிகள் தேவையாகும். முன்னதாக பா.ஜ.க கூட்டணி முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
ஜார்கண்ட் (81 தொகுதிகள்) சட்டசபை தேர்தல்: முன்னிலை நிலவரம்:-
பா.ஜனதா கூட்டணி - 30
காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம். எம்.) கூட்டணி - 49
பிற கட்சிகள் - 2
- 23 Nov 2024 10:36 AM IST
மராட்டிய சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணி முன்னிலை
மும்பை,
மராட்டியத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் கடந்த 20ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பா.ஜ.க. தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இதன்படி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலையில் உள்ளது. மராட்டிய மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவைப்படும் பெரும்பான்மைக்கான இடங்கள் 145 ஆகும்.
முன்னிலை நிலவரம்:-
பா.ஜனதா கூட்டணி - 224
காங்கிரஸ் கூட்டணி - 53
பிற கட்சிகள் - 11
- 23 Nov 2024 10:01 AM IST
மராட்டியம், ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்: வயநாடு இடைத்தேர்தல் - காலை 10.00 மணி நிலவரம்
மராட்டியம் (288 தொகுதிகள்) சட்டசபை தேர்தல் முன்னிலை நிலவரம்
பா.ஜனதா கூட்டணி - 212
காங்கிரஸ் கூட்டணி - 65
பிற கட்சிகள் - 10
ஜார்கண்ட் (81 தொகுதிகள்) சட்டசபை தேர்தல் முன்னிலை நிலவரம்
பா.ஜனதா கூட்டணி - 43
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம். எம்.) கூட்டணி - 33
பிற கட்சிகள் - 2
வயநாடு இடைத்தேர்தல் முன்னணி நிலவரம் :-
காங்கிரஸ் - 1,21,476
சி.பி.ஐ - 35,943
பா.ஜனதா - 21,422
பிற கட்சிகள் - 271
- 23 Nov 2024 9:49 AM IST
வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தி தொடர்ந்து முன்னிலை
வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி, பாஜக வேட்பாளராக நவ்யா அரிதாஸ், இடதுசாரி கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளராக சத்யன் மெகோரி களமிறங்கினர். இந்த சூழலில் வயநாடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது விறுவிறுப்பாக எண்ணப்படு வருகிறது.
இந்நிலையில் வயநாடு இடைத்தேர்தலில் காலை 9.50 நிலவரப்படி பிரியங்கா காந்தி 80,464 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
- 23 Nov 2024 9:39 AM IST
மராட்டியம், ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்: வயநாடு இடைத்தேர்தல் - காலை 9.40 மணி நிலவரம்
மராட்டியம் (288 தொகுதிகள்) சட்டசபை தேர்தல் முன்னிலை நிலவரம்
பா.ஜனதா கூட்டணி - 162
காங்கிரஸ் கூட்டணி - 97
பிற கட்சிகள் - 7
ஜார்கண்ட் (81 தொகுதிகள்) சட்டசபை தேர்தல் முன்னிலை நிலவரம்
பா.ஜனதா கூட்டணி - 39
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம். எம்.) கூட்டணி - 37
பிற கட்சிகள் - 1
வயநாடு இடைத்தேர்தல் முன்னணி நிலவரம் :-
காங்கிரஸ் - 68,917
சி.பி.ஐ - 20,678
பா.ஜனதா - 11,235
பிற கட்சிகள் - 121
- 23 Nov 2024 9:14 AM IST
மராட்டியம், ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்: வயநாடு இடைத்தேர்தல் - காலை 9 மணி நிலவரம்
மராட்டியம் (288 தொகுதிகள்) சட்டசபை தேர்தல் முன்னிலை நிலவரம்
பா.ஜனதா கூட்டணி - 115
காங்கிரஸ் கூட்டணி - 83
பிற கட்சிகள் - 7
ஜார்கண்ட் (81 தொகுதிகள்) சட்டசபை தேர்தல் முன்னிலை நிலவரம்
பா.ஜனதா கூட்டணி - 31
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம். எம்.) கூட்டணி - 41
பிற கட்சிகள் - 1
வயநாடு இடைத்தேர்தல் முன்னணி நிலவரம் :-
காங்கிரஸ் - 41,770
சி.பி.ஐ - 3,094
பா.ஜனதா - 1,556
பிற கட்சிகள் - 132
- 23 Nov 2024 8:52 AM IST
மராட்டியம், ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்: இருமாநிலங்களிலும் பா.ஜனதா முன்னிலை
மராட்டியம், ஜார்கண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
மராட்டியம் (288 தொகுதிகள்)
ஆளும் பாஜக, சிவசேனா ( முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் தரப்பு) இணைந்து மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் தரப்பு) இணைந்து மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் களமிறங்கின.
முன்னிலை நிலவரம்
பா.ஜனதா கூட்டணி: 90
காங்கிரஸ் கூட்டணி - 54
பிற கட்சிகள் - 9
ஜார்கண்ட் (81 தொகுதிகள்)
ஜார்கண்டில் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணியும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் மோதின.
முன்னிலை நிலவரம்
பா.ஜனதா கூட்டணி - 28
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம். எம்.) கூட்டணி - 15
பிற கட்சிகள் - 0
- 23 Nov 2024 8:41 AM IST
வயநாடு இடைத்தேர்தல்: காங்கிரஸ் முன்னிலை
வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி, பாஜக வேட்பாளராக நவ்யா அரிதாஸ், இடதுசாரி கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளராக சத்யன் மெகோரி களமிறங்கினர்.
இந்நிலையில், வயநாடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது விறுவிறுப்பாக எண்ணப்படு வருகிறது.
முன்னிலை நிலவரம்
காங்கிரஸ் - 13,800
சி.பி.ஐ - 395
பா.ஜனதா - 255
பிற கட்சிகள் - 34
- 23 Nov 2024 8:27 AM IST
மராட்டியம், ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்: பா.ஜ.க கூட்டணி முன்னிலை
மராட்டிய, ஜார்கண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
மராட்டியம்
ஆளும் பாஜக, சிவசேனா ( முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் தரப்பு) இணைந்து மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் தரப்பு) இணைந்து மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் களமிறங்கின.
முன்னிலை நிலவரம்
பா.ஜனதா கூட்டணி: 36
காங்கிரஸ் கூட்டணி - 6
பிற கட்சிகள் - 1
ஜார்கண்ட்
ஜார்கண்டில் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணியும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் மோதின.
முன்னிலை நிலவரம்
பா.ஜனதா கூட்டணி - 13
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம். எம்.) கூட்டணி - 6
பிற கட்சிகள் - 0