கடும் வெயில்: மராட்டியத்தில் பள்ளி வேலை நேரம் மாற்றம்


கடும் வெயில்: மராட்டியத்தில் பள்ளி வேலை நேரம் மாற்றம்
x

மராட்டியத்தில் கடும் வெயில் காரணமாக பள்ளிக்கூடங்களில் வேலை நேரம் மாற்றப்பட்டுள்ளது.

மும்பை,

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெப்ப அலைகளும் வீசி வருகிறது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மராட்டியத்தில் கடும் வெயில், வெப்ப அலை காரணமாக பள்ளிக்கூடங்களில் வேலை நேரம் மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி மராட்டியத்தில் உள்ள அனைத்து தனியார், அரசு பள்ளிகள் காலை 7 மணிக்கு தொடங்கி காலை 11.15 மணியுடன் நிறைவடையும் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், வகுப்பறைகளில் உள்ள மின்விசிறிகள் சரிவர செயல்படுவதை உறுதி செய்யும்படியும், மாணவ, மாணவிகளுக்கு குளிர்ந்த நீர் வழங்கவும் பள்ளிநிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Next Story