மத்திய பிரதேசம்: கோஷ்டி மோதலில் 4 பேர் பலி


மத்திய பிரதேசம்: கோஷ்டி மோதலில் 4 பேர் பலி
x

கோப்புப்படம்

முன் பகை காரணமாக இந்த சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஜபல்பூர்,

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள டிமாரி கிராமத்தில் நேற்று காலையில் 2 கும்பலுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் பின்னர் கோஷ்டி மோதலாக மாறியுள்ளது. இதனால் இரு தரப்பினரும் மாறி மாறி தங்களுக்குள் கடுமையாக மோதிக்கொண்டனர்.

இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த ஒருவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மற்றொருவர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். முன் பகை காரணமாக இந்த சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோஷ்டி மோதலில் 4 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story