பிரயாக்ராஜ்: பூட்டு கோவிலில் வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் காணிக்கை


பிரயாக்ராஜ்: பூட்டு கோவிலில் வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் காணிக்கை
x
தினத்தந்தி 5 March 2025 7:32 AM (Updated: 5 March 2025 8:47 AM)
t-max-icont-min-icon

பூட்டு கோவிலில் தற்போது பல மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்காக பூட்டுகளை தொங்கவிட்டுள்ளனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் மகா கும்பமேளா நடைபெற்ற திரிவேணி சங்கமத்தில் இருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் முத்திகஞ்ச் என்ற பகுதி உள்ளது. இங்கு நாதேஷ்வர் மகாதேவ் என்ற பழமையான சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் பளபளப்பான புதிய பூட்டுகளை காணிக்கையாக வழங்குகிறார்கள்.

தங்கள் வேண்டுதல் நிறைவேறினால், பக்தர்கள் பூட்டை திறந்து வீட்டுக்கு எடுத்து செல்கிறார்கள். இந்த கோவில் உள்ளூர் மக்களிடையே பிரபலமாக உள்ளது. அதிக எண்ணிக்கையிலான பூட்டுகள் இங்கு இருப்பது, ஒரு சாதாரண பார்வையாளருக்கு ஒரு பூட்டு கடைக்கு வந்ததை போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. வேண்டுதலுக்காக வரும் பக்தர்கள் தங்கள பூட்டை தொங்க விட ஒரு இடத்தை கண்டுபிடிப்பது ஒரு கடினமான பணியாக உள்ளது. ஏன் என்றால் இங்கு இப்போது 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூட்டுகள் தொங்குகின்றன.

பூட்டு கோவில் என்று பேச்சு வழக்கில் அழைக்கப்படும் இந்த கோவிலில் தற்போது பல மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்காக பூட்டுகளை தொங்கவிட்டுள்ளனர். பளபளப்பாக தொங்கும் பூட்டுகளால் பல பூட்டுகள் பெயர்கள் பொறிக்கப்பட்டும் பெயிண்டால் வண்ணம் தீட்டப்பட்டும் உள்ளன. ஒவ்வொரு நாளும் சுமார் 100-150 பூட்டுகள் வரை தொங்க விடப்படுகின்றன.

இந்த கோவில் குறித்து அங்குள்ள பூசாரி கூறியதாவது:-

தாய்லாந்தை சேர்ந்த பக்தர் ஒருவரும், இங்கிலாந்தை சேர்ந்த பக்தரும் தங்கள் வேண்டுதலுக்காக இங்கு பூட்டுகளை தொங்க விட்டுள்ளனர். இந்த கோவில் மிகவும் பழமையானது. கோவின் பின்புறச்சுவரில் ஒரு பழமையான கல்வெட்டு உள்ளது. அரசு இது குறித்து தொல்பொருள் ஆய்வு நடத்த வேண்டும் என்றார்.

1 More update

Next Story