உத்தரகாண்டில் நிலச்சரிவு - போக்குவரத்து துண்டிப்பு
பித்தோரகர்-லிபுலேக் மலைப்பாதை சாலையில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலத்தின் மலை பிரதேசமான லிபுலேக் அருகே அண்டை நாடான சீனாவுடனான எல்லை அமைந்துள்ளது. உத்தரகாண்டின் பித்தோரகரில் இருந்து மலைப்பாதை வழியாக லிபுலேக்கும் சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பித்தோரகர்-லிபுலேக் மலைப்பாதை சாலையில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு சாலைகள் சேதமடைந்து துண்டிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மலைப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டு சீரமைக்கப்படும்வரை பொது போக்குவரத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story