கூடங்குளம் அணுஉலை விவகாரம்: விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்டு
கூடங்குளம் அணுஉலை தொடர்பான வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை பிப்ரவரி 7-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
கூடங்குளத்தில் கூடுதல் அணுஉலைகளுக்கு வழங்கப்பட்ட கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்தின் அனுமதியை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த ஜி.சுந்தர்ராஜன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அமர்வு நேற்று விசாரித்தது. இந்த விசாரணையை தள்ளி வைக்குமாறு தமிழ்நாடு அரசு விடுத்த கோரிக்கையை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, பிப்ரவரி 7-ந் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
Related Tags :
Next Story