கேரளா: குடிபோதையில் தண்டவாளத்தில் படுத்திருந்த நபர் மீது கடந்து சென்ற ரெயில் - வீடியோ வைரல்
ரெயில் கடந்ததும் சர்வ சாதாரணமாக எழுந்து தள்ளாடியபடியே போதை ஆசாமி சென்றார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்திலுள்ள பன்னென் பாறையில் சிராக்கல் பகுதியை சேர்ந்த ஒருவர் குடிபோதையில் ரெயில் தண்டவாளத்தில் படுத்திருந்ததார். அவர் படுத்திருந்த ரெயில் தண்டவாளத்தை எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று கடந்து சென்றது. இதில் அவர் காயமின்றி உயிர் தப்பினார்.
ரெயில் கடந்ததும் சர்வ சாதாரணமாக எழுந்து தள்ளாடியபடி போதை ஆசாமி சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story