கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தமிழில் பொங்கல் வாழ்த்து
தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரம்,
தமிழகத்தில் பொங்கல் திருநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளபக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
செழிப்பையும், பெரும்வளத்தையும், முன்னேற்றத்தையும் சாத்தியப்படுத்துவது கூட்டுழைப்பும் ஒற்றுமையுமே என்று அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை நமக்கு உணர்த்துகிறது. பொங்கல் பண்டிகையை கொண்டாடும் இவ்வேளையில் சந்தோசமான, ஒளிமயமான சமத்துவ எதிர்காலத்தை அடைவதற்காக நாம் ஒன்றிணைந்து நிற்போம். என் தமிழ் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் உளங்கனிந்த பொங்கல் வாழ்த்துகள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story