‘காமராஜரின் நேர்மையும், சமூக நீதிக்கான பணிகளும் நம்மை ஊக்குவிக்கின்றன’ - ராகுல் காந்தி

காமராஜரின் நினைவு தினத்தையொட்டி அவருக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
புதுடெல்லி,
தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் ‘கர்மவீரர்’ காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“மாபெரும் தொலைநோக்கு சிந்தனையாளரான பாரத ரத்னா காமராஜரின் நினைவு நாளில் அவரை நினைவு கூர்ந்து வணங்குகிறேன். அவரது பணிவு, நேர்மை, விளிம்புநிலை மக்களின் கல்வி மற்றும் சமூக நீதிக்கான மேம்பாட்டிற்காக அவர் ஆற்றிய முன்னோடிப் பணிகள் தலைமுறை தலைமுறையாக நமக்கு ஊக்கமளித்து வருகின்றன.”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Remembering the great visionary, Bharat Ratna Thiru K. Kamaraj, on his death anniversary.His humility, integrity, and pioneering work in education and social justice for the upliftment of the marginalized continue to inspire generations. pic.twitter.com/CbZ9ZrhQsm
— Rahul Gandhi (@RahulGandhi) October 2, 2025
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





