சுப்ரீம் கோர்ட்டின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நாளை பதவியேற்கிறார்


சுப்ரீம் கோர்ட்டின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நாளை பதவியேற்கிறார்
x
தினத்தந்தி 10 Nov 2024 6:17 PM IST (Updated: 10 Nov 2024 6:20 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக கடந்த 2005-ம் ஆண்டு சஞ்சீவ் கன்னா நியமிக்கப்பட்டார்.

புதுடெல்லி,

இந்தியாவின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நாளை (நவ.11) பதவியேற்கிறார். ஜனாதிபதி மாளிகையில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இன்று ஓய்வு பெறுவதை தொடர்ந்து, நீதிபதி சஞ்சீவ் கன்னா நாளை தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார். அவரது பதவிக்காலம் மே 13, 2025 வரை நீடிக்கும்.

நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) நீதிபதி சந்திரசூட் தலைமை நீதிபதியாக இருந்த கடைசி வேலை நாளாகும், இன்றுடன் (10-ந் தேதி) ஓய்வு பெற்றுவதையொட்டி நேற்று முன்தினம் பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் சந்திரசூட், அடுத்த தலைமை நீதிபதியாக பதவி ஏற்க உள்ள சஞ்சீவ் கன்னா, மூத்த வக்கீல் கபில்சிபல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனிடையே மூத்த நீதிபதி சஞ்சீவ் கன்னாவை சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்து கடந்த மாதம் 24-ம் தேதி உத்தரவிட்டார்.

டெல்லி ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக கடந்த 2005-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட சஞ்சீவ் கன்னா, 2019-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியானார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, தேர்தல் பத்திர திட்டம் ரத்து, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கல் போன்ற பல உள்ளிட்ட முக்கியமான தீர்ப்பு வழங்கிய அமர்வுகளில் இவர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story