370ஐ நீக்கிய மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவோம் - உமர் அப்துல்லா


370ஐ நீக்கிய மத்திய அரசின் முடிவுக்கு எதிராக  தீர்மானம் நிறைவேற்றுவோம் - உமர் அப்துல்லா
x
தினத்தந்தி 18 Aug 2024 9:01 AM IST (Updated: 18 Aug 2024 10:14 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு செப்.,18லும், 2ம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப்., 25லும், 3ம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்.,1லும் தேர்தல் நடைபெற உள்ளது. காஷ்மீரில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால், நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்தநிலையில், ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை, பிரதான விஷயமாக கையில் எடுத்துள்ளது.

இது தொடர்பாக, செய்தியாளர்கள் சந்திப்பில் உமர் அப்துல்லா கூறியதாவது:

தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினால் சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ நீக்கிய மத்திய அரசின் முடிவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவோம்.

நாங்கள் மக்களவை தேர்தலுடன்,சட்டசபை தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால் அது நடக்கவில்லை. தற்போது தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் கமிஷனின் முடிவை வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story