ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: விறுவிறு வாக்குப்பதிவு
ஜார்க்கண்ட் சட்டசபைக்கான முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
ராஞ்சி,
Live Updates
- 13 Nov 2024 7:29 PM IST
ஜார்க்கண்ட் சட்டசபை முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து, 2-ம் கட்ட வாக்குப்பதிவு வருகிற 20-ந்தேதி நடைபெறும்.
- 13 Nov 2024 6:16 PM IST
5 மணி நிலவரம்:
ஜார்க்கண்ட் சட்டசபை முதற்கட்ட தேர்தலில் மாலை 5 மணி வரை பதிவான வாக்குப்பதிவு நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, மாலை 5 மணி நிலவரப்படி 64.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- 13 Nov 2024 4:14 PM IST
3 மணி நிலவரம்:
ஜார்க்கண்ட் சட்டசபை முதற்கட்ட தேர்தலில் பிற்பகல் 3 மணி வரை பதிவான வாக்குப்பதிவு நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, பிற்பகல் 3 மணி நிலவரப்படி 59.28 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- 13 Nov 2024 3:01 PM IST
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: ராஞ்சியில் உள்ள வாக்குச்சாவடியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார்.
- 13 Nov 2024 2:04 PM IST
1 மணி நிலவரம்:
ஜார்க்கண்ட் சட்டசபை முதற்கட்ட தேர்தலில் மதியம் 1 மணி வரை பதிவான வாக்குப்பதிவு நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, மதியம் 1 மணி நிலவரப்படி 46.25 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- 13 Nov 2024 1:24 PM IST
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: ராஞ்சியில் உள்ள வாக்குச்சாவடியில் அம்மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தனது மனைவி கல்பனாவுடன் வந்து வாக்களித்தார்.
- 13 Nov 2024 12:36 PM IST
11 மணி நிலவரம்:
ஜார்க்கண்ட் சட்டசபை முதற்கட்ட தேர்தலில் காலை 11 மணி வரை பதிவான வாக்குப்பதிவு நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, காலை 11 மணி நிலவரப்படி 29.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- 13 Nov 2024 11:51 AM IST
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரியும், பாஜக வேட்பாளருமான சம்பாய் சோரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும். ஜார்க்கண்டில் பாஜக ஆட்சி அமைக்கும் என்பதில் சந்தேகமில்லை. வங்காளதேச ஊடுருவல், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவை நம் முன் உள்ள சில முக்கிய பிரச்சினைகள். இவ்வாறு அவர் கூறினார்.
- 13 Nov 2024 10:48 AM IST
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: ராஞ்சியில் உள்ள புனித குல்தீப் உயர்நிலை பள்ளியில் பாஜக எம்.பி தீபக் பிரகாஷ் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.
- 13 Nov 2024 10:32 AM IST
9 மணி நிலவரம்:
ஜார்க்கண்ட் சட்டசபை முதற்கட்ட தேர்தலில் காலை 9 மணி வரை பதிவான வாக்குப்பதிவு நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, காலை 9 மணி நிலவரப்படி 13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.