உத்தரபிரதேசம்: மருத்துவமனையில் தீ விபத்து - பலியான குழந்தைகள் எண்ணிக்கை 15 ஆக உயர்வு


உத்தரபிரதேசம்: மருத்துவமனையில் தீ விபத்து - பலியான குழந்தைகள் எண்ணிக்கை 15 ஆக உயர்வு
x

மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான குழந்தைகள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது.

இந்த மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு வார்டில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர தீ விபத்த்;உ ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் மூச்சுத்திணறல், தீக்காயங்களால் 10 குழந்தைகள் உயிரிழந்தன. மேலும், 39 குழந்தைகள் காயங்களுடன் மீட்கப்பட்டன. இதில் சில குழந்தைகளுக்கு பயங்கர தீக்காயங்கள் ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், தீ விபத்தில் காயமடைந்த குழந்தைகளில் மேலும் 5 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதனால் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.

1 More update

Next Story